Friday, September 9, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-4

4. நாராயணகுருவின் வெற்றி


தமிழக பிராமணர்கள் தங்களது பிராமண மனத்தை பாதுகாப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்திடம் இறக்கி வைத்தபோது கேரளத்து பார்பனர்கள்… கேரள சாதிகளை ஒன்றினைத்து விட்டனர்… நெசவாளர்கள்.. என்ற பிரிவில் கேரளத்தில் முன்னேறிய சாதியை சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களும் அடங்கியிருந்தனர். குறிப்பாக நம்பூதிரிப் பெண்கள் கொடூர ஒடுக்குதலில் நெசவுத் தொழிலில் ஈடுப்டடிருந்தனர். ஒன்றுபட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வெள்ளாளர்களும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கேரள சாதிகளை பிரித்தாலும் சூழ்ச்சி அறியாத நம்பூதிரிகள் நாயர்களின் ஆதரவைச் சிறிய அளவில் பெற்றிருந்த போதும் பிள்ளை கட்டு - மற்றும் மதுவேட்கை போன்ற பிற்போக்குத் தனத்திலிருந்து நாயர் சமூகத்தை ஸ்ரீ நாராயண குரு விடுவித்தார் என்ற விபரம் .. முற்போக்கு நாயர் மனதினை நெருடியது… காலங்காலமாய் நாயர்களால் ஒடுக்கப்பட்ட ஒரு சாதியிலிருந்து உதித்தவர் தங்களை நேசித்ததை உணர துவங்கினர். தற்கொலைக்குச் சென்ற மேனன் செல்வந்தரைக் காப்பாற்றி கேரள மண்ணில் அவரைப் பெருந்தொழிலுக்கு சொந்தக்காரராக்கிய ஸ்ரீ நாராயண குருவை மேனன் சமூகத்தினர் அங்கீகர்த்தனர். தர்மதீர்த்தர் என்ற மேனன் சமூகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ நாராயண குருவின் சீடர் என்பதும் பின்னால் குருவை உலகரியச் செய்தவரும் அவரே. ஸ்ரீ நாராயண குருவின் ‘சாதி மறுப்பு’ கேரள மக்கள் மனங்களில் பதியம் செய்தது.

வைக்கம் வீதிகளில் நம்பூதிரிப் பெண்கள் அஇசி சமைக்க, நாயர் பெண்கள் இலையிட, ஈழுவப் பெண் காய்கறி வைக்க புலய சமூகம் அடுப்பூதி, பேரிகை சாதியினரும்.. கேரளத்து அனைத்து மக்களும் கரங்கோர்க்க .. 900 வருட பார்ப்பன மலை சடசடவென சரிந்தது, அரபிக்கடலில் விழ்ந்தது. வர்ணப் பிரச்சனை முடிந்த கேரளத்தில் வர்க்கச் சிந்தனை எழுந்தோடியது. இருந்த போதிலும் சிறியளவு சாதியம் இன்றும் மரிக்காது கேரள பூமியில் வசிக்கிறது என்றே பரிசீலிக்க வேண்டும்.

ஸ்ரீ நாராயண குருவால் துவக்கப்பட்ட கேரள மறுமலர்ச்சி தமிழகப் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரால் வைக்கம் பூமியில் முடித்து வைக்கப்பட்டது. குருவின் வாதம் எதிர் நிலை வாதம் கொண்ட போராட்ட வடிவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வாதம் வைக்கம் போராட்டத்துக்கு பொருந்தாது. ஏனெனில் குரு வைக்கம் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று வாதிடுவது தவறு வெள்ளூர் மடத்தை சத்தியாகிரகிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குரு அனுமதி தந்தார். சிவகிரியில் போராட்டத்திற்கு நிதி சேர்க்க ஒரு அமைப்பினை உருவாக்கினார்.

ஸ்ரீ நாராயண குருவால் துவக்கி வைக்கப்பட்ட இயக்கம் கேரள பூமியில் தந்தை பெரியாரால் முடித்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் தந்தை பெரியாரால் துவக்கி வைக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கம் ஸ்ரீ நாராயண குரு சிந்தனை கொண்டவர்களால் வரும் காலத்தில் முடித்து வைக்கப்படும். பெரியாரின் கடவுள் மறுப்பு - பின் தமிழர்களை மொழி, பண்பாடு, தேசிய இனம் வகையிலான எழுச்சிகரமான கல்வியாளர்களை உருவாக்கியது. கேரளத்தில் குருவின் சிந்தனைகளை குமாரன் ஆசான் இலக்கியமாக்கினார். தமிழகத்தில் தந்தைப் பெரியாரின் சிந்தனைகளை பாவேந்தன் பாரதிதாசன் இலக்கியமாக்கினார். தமிழகச் சூழலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அடையாளப்படுத்தப்படும் சாதிகள் சதுர்வணத்துக்கு மிக சவாலாக தங்களது பண்பாட்டினை பாதுகாத்தனர். கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர், நாடார், வன்னியர், கவுண்டர், நாயக்கர் சமூகங்களும், தாழ்த்தப்பட்ட சமூகங்களும், நாட்டார் தெய்வங்களை பார்ப்பன பெருந்தெய்வங்களுக்கு மாற்றாய் வழிபாட்டுப் போரினைக் காலங்காலமாகத் தொடர்ந்து வந்தனர். சதுர்வணத்தின் மூன்று அடுக்கினை (பிராமணன், சத்திரியன், வைசியன்) இந்திய அளவில் பிராமணர்கள் கைப்பற்றியபோதும், தமிழகத்தில் பிராமணரல்லாதோர் அரசாண்ட வரலாறு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆளப்பதிந்ததால், பிராமணரல்லாதோர் பண்பாட்டுத்தள ஒடுக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

கேரளச் சூழல் தமிழகச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழவர் பிற்படுத்தப்பட்ட சாதியாக கேரளத்தில் அடையாளப்படுத்தப்பட்ட போதும், கேரள தாழ்த்தப்பட்ட சாதிகளான புலயர், பரயர்(பேரிகை சாதியினர்), குறவர் சாதிகளை விட கடுமையான பண்பாட்டுத் தள தாக்குதலை தாங்கியவர்கள் ஈழவர்களே.. முதன் முதலில் ஈழவர்களே பார்ப்பனியம் விதித்த கோடுகளை அழித்தொழிக்க முற்பட்டனர். அதனாலேயே கொடூரமான படுகொலைகளை அச்சமூகம் சந்திக்க நேரிட்டது.

தமிழகத்தைவிட கிறிஸ்தவத்தின் தாக்கம் கேரளத்தின் முந்தைய வரலாற்றினை மாற்றி அமைத்தது.

1914-1917 கேரள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய பட்டியல்


சாதிகள் நாயர் ஈழவர் கிறிஸ்தவர் இஸ்லாமியர் புலையர் பறையர்
1914 70,712 23,895 84,161 4,883 2,017 1,097
1915 81,034 30,790 96,648 6,095 4,259 1,816
1916 94,336 39,224 1,13,020 8,569 8,494 2,652
1917 99,490 45,429 1,19,563 9,353 10,913 4,855

( நன்றி: நிர்மால்யாவின் கேரளத்தின் முதற்போராளி அய்யன்காளி நூலிலிருந்து)


நாயர், ஈழவர், புலையர், பறையர் சமூகங்கள் கிறிஸ்தவர்கள் என்னும் குறியீட்டினிலும் வருவார்கள். கேரள மக்களின் கல்வி தேவையினை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் துவைக்கி வைத்த போதும், ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலனம் கல்வி சாலைகள் துவங்கியபோது கேரள மக்களின் கல்வி தாகம் காட்டாற்று வெள்ளமென கேரள வீதிதோறும் கசடுகளை நீக்கத் துவங்கியது. ஸ்ரீ நாராயண குரு அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் செயல்பாடு பிரதிபலிக்கும் விளைவுகள் மீது அச்சம் கொண்டிருந்தார். தான் வாழ்ந்த காலத்தில் சிவகிரி மற்றும் தர்மபரிபாலன் பள்ளிகளிலும் சாதி ஒழிப்பினையே பிரதானமான முழக்கமாக முழங்கினார். ஈழவர்களுக்குக் கீழாக காலங்காலமாக பொருளாதாரப் பலமின்றி கிடந்த லட்சக்கணக்கான மக்களை கண்ட பின்பே, குருவின் சிந்தனை ஈழவரல்லாத மக்களுக்காக சிந்திக்கத் தூண்டியது. அன்றைய சிவகிரி மடத்தில் வளர்ந்து வந்த புலயர் பரயர் (பேரிகை சாதியினர்) மக்கள் வீடுகளுக்குச் சென்று அந்த பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளை சிவகிரி மடத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். குருவின் மீது நேசம் கொண்ட மக்கள் தங்கள் குழந்தைகளை குருவின் சாலைக்கு மனமுவந்து அனுப்பி வைத்தனர். பார்வைக்கு பிராமணர்களைப் போல காட்சி தந்த அக்குழந்தைகளே மகாத்மா முன்பாய் தெய்வீக சதகம் எனும் பாடலை இயற்றிப் பாடிய போது மகாத்மாவின் கண்கள் குளமாகியது.

தமிழகத்தில் நாத்திக விடுதலை கானம் முழங்கி தமிழ் சாதிகள் எழுச்சி பெற்றது. கேரளத்தில் குரு ஆத்மோபதேச சதகம். வெளியிட்ட போது அதன் அதிர்வுகள் சவணர்கள் தலையில் பேரிடியாக விழுந்தது. ஆன்மா - ஆன்மாவுக்கு போதிக்கும் கல்வியே ஆத்மோபதேச சதகம். உயிர்கள் கொல்லாமை அதன் உள்ளார்ந்த தத்துவம். குரு மருத்துவாமலையிலிருந்து ஞானம் பெற்று அருவிப்புர பிரதிஷ்டைக்கு முன்பாய் மீனவ மக்களுடன் வாழ்ந்த காலத்தில், பலமுறை மீனவ மக்கள் அன்புடன் தரும் மீனை புசித்து வந்தார். சவர்ணர்கள் குரு மீனை உண்ட நிகழ்ச்சியை, ஆத்மோபசதக வெற்றியினை அழித்தொழிக்க உபயோகப்படுத்தினர். மீனைப் புசித்த குரு.. சைவ சாமியாரா? இல்லை பரய சாமியாரா? என்று கருத்து போரினை கடுமையாகத் துவங்கினர்.

சவர்ணர்கள் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் மாமிசம் உண்ட நிகழ்ச்சியினை வைத்து விவேகானந்தரையே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். விவேகானந்தரோ எனது ஆன்மிகம் எனது சிந்தனையில் உள்ளது உணவில் அல்ல என்று வெடித்து குமுறினார். (இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி முட்டை, மீன் இரண்டும் சைவமாக கருத வேண்டுமென்று அறைகூவுகிறது)

குரு சிவகிரி மடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விசேச, வேத கல்வியை துவக்கியதன் பின்னனியில் இந்த சைவ, அசைவ மோதல் உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை குரு காஞ்சிபுர சவர்ணர்களின் கோவிலுக்கு நுழைந்த போது குருவின் அருளால் கோவில் கதவு திறந்ததாக கருதுவது ஒரு வகையான சரடு ஆகும்.

தமிழகத்தைப் போல சைவ வேதாந்திகள் சாதி மேட்டிமை வாதம் குருவிடம் எடுபடாது. தாங்கள் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமென்ற அச்சத்திலே காஞ்சிபுரக் கதவு திறந்தது என்று திருத்திப் படிக்க வேண்டும். குருவின் காலத்தில் தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் அதிர் வேட்டுகளை முழங்கத் துவங்கிவிட்டது.

தர்ம பரிபாலனத்தில் குருவின் மறைவினையடுத்து சாதி மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. குறிப்பாக ஈழவர்களை தர்மபரிபாலனிலிருந்து வெளியேற்ற ஈழவரல்லாத மக்கள் முயற்சித்ததாக ஈழவர்கள் தரப்பு வெகுண்டெழ, யோகம் ஈழவ சாதி மேட்டிமை வாதத்தில் சீரழிவதாக ஈழவரல்லாதோர் வாதிட கேரளத்தில் N.S.S (நாயர் சர்வீஸ் சொசைட்டி), புலயர் மகாசபை மற்றும் பறையர் அமைப்பு என்று சாதிய வாதம் தலைதூக்கத் தொடங்கிய பின்பும் கேரள மக்கள் தங்களது சாதிய, வேற்றுமையினை கேரள எல்லைக்கு வெளியில் தெரியாதவாறு ஒரு முதிர்ந்த பக்குவ நிலையினை அடைந்து விட்டனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கே.ஆர்.நாராயணன் இந்திய ஜனாதிபதியாக பதவியில் அமர்வதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவரை ஜனாதிபதியாகப் பார்க்க மனமின்றி வானுக்கும், பூமிக்கும் குதித்த டெல்லி சவர்ணர்களை கேரள மக்கள் வீழ்த்தினர். நாங்கள் மலையாள சாதி என்று ஒத்த குரலில் கேரள மக்கள் எழுந்து நின்றபோது, இந்திய சவர்ணர்கள் தங்கள் வால்களை வெளியில் தெரியாது சுருட்டிக் கொண்டனர். இதுவரையில் இந்திய தேசத்தில் அமர்ந்த ஜனாதிபதிகளில் துணிவானவர் என்ற பெயருடன் பௌத்தம் அரசாண்ட போது அரசாண்ட சமூகம் என்பதை மறைந்த ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் நிரூபித்தார்.

ஸ்ரீ நாராயண குருவின் ஆன்மீக வழி புறந்தள்ளப்பட்ட சமூகத்தினை உயர் கலாச்சார புருஷர்களாக்குவது, சிறு துஷ்ட தெய்வங்களை விலக்கி பெருந்தெய்வ வழிபாடு, பிற்காலத்தில் அம்மக்களிடம் ஆன்ம பலத்தையும், புதிய உத்வேகத்தையும் ஊட்டியதுடன் தான் இழந்த பெருமையினை 1000 வருடங்களுக்கு பின்பு மீட்டுத் தந்தது. ஆகவே இரண்டு நிலைப்பாடுகளும் போற்றுதலுக்குரிய பாதைகளே.

திராவிட இயக்கம் பிராமண சாதியின் புனிதத்தன்மையினை வேரோடு பிடுங்கி எறிந்தது அதன் விஞ்ஞான கல்வி அணுகுமுறையினால் நிகழ்ந்தது.

இந்திய வைதீகத்தின் முதல் நூல்கள் ரிக், யசூர், சாமம், அதர்வனம் இவைகள் தத்துவ நூல்கள் அல்ல. அவைகள் சடங்குப்பாடல்கள் ஆகும்.

EMS வேதங்களில் நாடுவில் கூறியிருக்கும் ‘ நம்பூதிரிகள் ரிக், யசூர், சாம வேதிகள் என்ற பிரிக்கப்பட்டனர். ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது வேதங்கள் குருவிடமிருந்து நேரடியாக கேட்பதும், பாராயணம் செய்வதும் கட்டாயம். ஒரு பிரிவினராது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம்பாகமாக முழுவதும் பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டது போக தாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ குருமார்களோ அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிடுவார். “உண்மையில் வேத ஸ்லோகங்களில் நிறைந்திருப்பது ஏமாற்று வேலையே. இருந்த போதிலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது சத்திரியர்கள் என்று அறியப்படுகிற மன்னர் மானியம் பெற்ற மக்களின் மானியத்தை ஒழித்த போது, அதனை இடது சாரிகள் வரவேற்றனர். ஆதலால் இந்திய தேசத்தில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளை நிராகரிக்கக் கூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும். (சத்திரியர் என்று அறியப்படுகின்ற மக்கள் மன்னர் மானியம் பெற்றவர்களையே சுதந்திரத்திற்குப் பின் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் உழைக்கும் மக்களில் பலர் தங்களை சத்திரியர் குலம் என்று அடையாளப்படுத்துவது தமிழகத்தில் சமூக தத்துவார்த்த கல்வி மிகவும் பின் தங்கி உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.) ஈ.எம்.எஸ் - ன் கருத்திற்கு எதிராய் மார்க்சிஸ்ட் ஜீன் 2003 பக்கம் 37- ல் பதிவினை கவனிக்கவும் “வேதங்களின் உயரிய கருத்துக்களும், பண்டைய இந்து மற்றும் இந்திய சாத்திரங்களுமே பாரதத்திற்கு வழிகாட்டும் கோட்பாடுகள் என அறிவிக்கிற பி.ஜே.பி - யோடு கைகோர்ப்பதற்கு இந்த திராவிட கட்சிகள் தயங்குவதில்லை”. இடது சாரிகள் திராவிடக் கட்சிகளை தாக்குகின்ற போது - திராவிட கட்சிகளின் பி.ஜே.பி. ஆதரவினை வேத சாத்திரத்துடன் முடிச்சு போடுகின்றனர். அனால் இ.எம்.எஸ் - ன் ‘வேதங்களின் நாடு’ பற்றிய அதிகாரப்பூர்வ மறுப்பினை வெளியிடாது மார்க்சிய இயக்கம் ‘அது இ.எம்எஸ் - ன் தனிப்பட்ட படைப்பு என்று நழுவுகின்றனர். வர்க்கம் எப்படி இந்திய மண்ணில் பலமானதோ அதே போன்ற பலம் வர்ண பிரச்சனை என்பதை ஒத்து கொண்டால் மார்க்சிய தத்துவம் இந்திய சூழலுக்கு அன்னியமாகி விடும் என்று தேவையின்றி அச்சப்படுகின்றனர். இ.எம்.எஸ் -ன் படைப்பின் குறைபாடு மார்க்சியத்தின் குறைபாடு கிடையாது. அது இந்திய சமூகத்தின் குறைபாடு என்று ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். இதுவே இடதுசாரிகள் இந்திய சமூகத்தை புரியாது எதிர்பாதையினை தேர்ந்தெடுத்து பயணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி எழுச்சியானது பிராமணரல்லாதோர் இயக்க எழுச்சியே என்ற போதும் சட்டிக்குள் இருக்கும் சாதத்தை தம் மக்களுக்கு அதிகம் தர வேண்டும் என்பதே பா.ம.க வின் ஆரம்ப நிலையாக இருந்தது. உங்கள் வாக்கு வன்னியருக்கா? இல்லை அன்னியருக்கா? என்ற பிரச்சாரம் பிற்போக்கு பிரச்சாரமாக தமிழக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்டது. தற்போது பா.ம.க. அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கட்சியாக உருமாறப் போராடி வருகிறது. 27% இடஒதுக்கீடு விசயத்தில் மத்திய அரசில் அதன் தாக்கம் திராவிட இயக்கத்தைக் காட்டிலும் வேகத்தோடு ஈடுபடுத்திக் கொண்டது என்ற போதும், வன்னியர் அல்லாத மக்கள் பா.ம.க - வை அன்னியராகவே பார்க்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளின் எழுச்சி தலித் அரசியலின் சாதி நிராகரிப்புப் பாதையினை நோக்கி நகராது தடுமாறிக் கொண்டிருக்கிறது. தலித் - எதிர் தலித் அல்லாதோர் முரண்பாடு என்பது சாதிய நிராகரிப்பு தன்மை கொண்டது. அருந்ததியர் மொழி சிறுபான்மையினர் என்ற திருமாவளவன் விமர்சனமும், புதிய தமிழகத்தின் எழுச்சியின்மையும் தலித் பண்பாட்டு அரசியலில் நிரப்பப்படாத வெற்றிடமாகவே கிடக்கின்றது. இருந்த போதிலும் விடுதலை சிறுத்தைகளின் எழுச்சி பலமாக தமிழக வீதிகளில் எதிரொலித்து வருகிறது.

தமிழகத்தின் இடதுசாரிகளை பிராமணரல்லாதோர் இயக்கத்தில் அடைக்க இயலாது என்ற போதிலும், சாதிய ஒடுக்குதலுக்கு எதிராய் இடதுசாரிகள் களப்போராளிகளாக போரிட்டனர். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டாரச்சினேந்தல், நாட்டார்மங்கலம் உள்ளாட்சி தேர்தல், வாச்சாத்தி சம்பவம் தஞ்சை மண்ணின் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான இயக்கம் என்று தடம் பதித்திருந்த இடதுசாரிகள் சாதி பற்றிய விசாலமான புரிதலினால் தங்களது தளங்களை தலித் இயக்கங்களுக்கு பல பகுதிகளில் தாரை வார்த்து வருகின்றனர். மேல் சாதியில் பிறந்த இடது சாரித் தலைவர்கள் தலித் மக்களோடு இணைந்து போராடினர் என்ற இடது சாரிகளின் புளகாகித விமர்சன அணுகுமுறைகள் தலித் மக்களிடம் இடதுசாரிகள் மீதான வெறுப்பினை அதிகரித்தது. அரசியல் முதிர்ச்சி கொண்ட இடதுசாரியினர் சமூக முதிர்ச்சியின்மை என்ற நோயினால் தமிழகத்தில் தங்களது பலமான தளங்களைத் தக்க வைக்கவே தடுமாறி வருகின்றனர். இடது சாரி இயக்கத் தலைவர்கள் திராவிட, தேசிய இயக்கங்களுக்குப் பல்வேறு நுணுக்கங்களைப் பல காலகட்டத்தில் கற்றுத்தந்தனர். இடது சாரித் தலைவரிடம் பாடம் கற்றவர்கள் தங்களது பலத்தினை வலுப்படுத்திக் கொண்டனர். ஆனால் தமிழக இடது சாரித் தலைவர்கள், ஊழியர்கள் எவ்விதப் பாடத்தினையும் தமிழ் சமூகத்திடமிருந்து கற்றுத் தேறவில்லை. இயல்பாக இடது சாரிகளின் மனோபாவம் மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டுமென்றே விரும்புகின்றனர். தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தினைக் கற்க விரும்பாத மாணவனாகத் தேர்ச்சி பெறாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆரியர்கள் ஒரு வகை நாடோடிகளே! இந்திய சமூகத்தில் ஒரு 3000 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் நாடோடிகள் என்பதோடு அல்லாமல் அவர்கள் கலாச்சாரமற்ற சமூக மக்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கலாச்சாரம் பலமானது என்று விஞ்ஞானக் கல்வி உணர்த்தியது. 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் மாமிசம் உண்பர்களாகவும் சுராபானம் போன்ற மது வகைகள் உண்டு கீழான வாழ்க்கை வாழ்ந்தனர். இன்றைக்கு அவர்களால் சூத்திரர்கள் என்று முத்திரைக்குத்தப்பட்ட திராவிட மக்கள் பலமான கலாச்சாரமிக்கவர்களாக இருந்தனர். இத்தகைய சூழலிலே திராவிடர்களின் தூய அறிவை ஆரியர்கள் அபகரித்து, திராவிடர்களை கீழான நிலைக்குத் தள்ளினர். உபநிடதங்களுக்கு முந்தைய நூல்கள் அனைத்தும் சடங்கு நூல்களே... உபநிடத காலங்களே ஆரியர்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொண்ட காலம். ஆரியர்களின் அறிவு - திராவிடர்களுடன் பழகிய பின்பே என்று விஞ்ஞான கல்வி விளக்கியது. உபநிடதங்களை ஆரியர்கள் திராவிடர்களிடமிருந்து கைப்பற்றிய பின்பே ஆரியர்கள் வலு கூடியது. திராவிடர்களுடனான உறவுக்கு பின்பு திராவிட அறிவின் பலனை ஆரியர்கள் உணரத் தொடங்கினர். பின் பலமான திராவிடர்களுக்கு நிகரான கலாச்சார மிக்கவராய் ஆரியர்கள் உருமாறினர். பின் பிராமணன் (ஆரியன்), தாசன் (பிராமணரல்லாதோர்) என்ற இரண்டு சாதிகள் தோன்றி உருமாறினர். தாசனிலிருந்து 6,400 கிளை சாதிகள் உற்பத்தியாயின.

கேரளத்தில் ஸ்ரீ நாராயண குரு எடுத்த நிலைப்பாடு 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்களுக்கு கடன் தந்த நாம் ‘மீண்டும் சமஸ்கிருதத்தையும், உபநிடதங்களையும், வேதங்களையும் திரும்ப வட்டியுடன் பெறுவது போன்றதாகும். ஏனெனில் சமஸ்கிருதம் ஆரிய மொழியல்ல. அது திராவிடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொழியாகும். ஏனெனில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சமஸ்கிருத மொழியோடு வந்தவர்கள் என்ற வாதம் தவறாகும். ஆயுர்வேதம் கற்ற ஈழுவர்கள் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈழுவர்களிடம் சமஸ்கிருத அறிவு மற்றும் பாலி மொழி அறிவும் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் - செப்பேடுகள் இன்றும் உள்ளன. (ஸ்ரீ நாராயண குரு - மா.சுப்பிரமணியம்)

‘ நீ யாரப்பா எங்களது சிவனை தொடுவது’(பிரதிஷ்டை) என்ற ஆரியர்களின் கோபத்துக்குத் திராவிடரான ஸ்ரீ நாராயண குருவின் பதில் “நான் பிரதிஷ்டை செய்தது எங்களது திராவிட சிந்தனையைத்தான் என்று கூட புரிந்து கொள்ள இயலும்.. ஏனென்றால் ஸ்ரீ நாராயண குருவின் பார்வையில் “தூய அறிவே பிரம்மன்” என்பதாகும். உண்மையில் கடவுள் இந்த உலகை படைத்தார் என்றால் கடவுளை ஏற்றுக் கொள் என்பதாகும். உண்மையில் இயற்கைதான் இந்த உலகைப் படைத்தது என்றால் இயற்கையினை கடவுளாக மதி என்பதாகும்.

மூலவர் இல்லாது விளக்கு பிரதிஷ்டையும், முகம் காட்டும் கண்ணாடி பிரதிஷ்டையும் ஸ்ரீ நாராயண குரு கடவுளை தூய அறிவுள்ள மனிதர்களின் மனங்களிலே கண்டார். ஆகவே ஸ்ரீ நாராயண குருவை இன்று கடவுளாக வழிபடுபவர்களுக்கு நான் கூறுவது “அவர் கடவுளல்ல, கடவுளுக்கும் மேலான ஒரு மகத்தான மனிதர்” அவ்வாறு ஸ்ரீ நாராயண குருவை அழைப்பதுவே ‘கண்ணாடியைக் கோவிலின் மூலவராக பிரதிஷ்டை செய்த ஸ்ரீ நாராயண குருவுக்கு பொறுத்தமானதாகும். தந்தைப் பெரியாரின் இயக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை எழுச்சிப் பெற செய்தது. தந்தைப் பெரியாரின் கருத்துப்படி பெரியாரின் சிந்தனைகள் அடுத்தப் புள்ளியை நோக்கி நகரும் போது, அதனை அன்றைய சூழலுக்கு மறுவடிவம் தர வேண்டும் என்பதாகும். ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகளை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நவீனத்துவப் படுத்த வேண்டும்.

ஆகவே கேரளத்திலும், தமிழகத்திலும் மற்றும் இந்திய தேசமெங்கும் எழுந்த மின்னல்களை ஒரு புள்ளிக்குள் அடக்கினாலேயே, இந்திய சமூகத்தில் தற்போதைய அடுக்கு மறைந்து புதியதொரு இந்திய தேசத்தினை நோக்கி அப்புள்ளி நம்மை நகர்த்திச் செல்லும்.

ஏனென்றால் கேரள பூமியில் குருவின் இயக்கம் வெற்றியடைந்ததற்கு பிரதான காரணம், ஆரியர் வருகைக்கு முன்பாக வந்த ஈழவரிலிருந்து பிரிந்து சென்ற ஆரிய ஆதரவாளர்களே நாயர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கி.பி.9,10,11 ஆம் நூற்றாண்டு பதிவுகளில் கேரள சமூகம் பற்றிய புரிதல் வெற்றியடைய செய்தது. கேரள ஆய்வில் இன்றைய நம்பூதிரிகள் முழுவதும் ஆரியர்களல்ல என்றும் ஆரியர்களின் அடர்த்தியின்மையால், புத்த மத வீழ்ச்சியின் போது கோவில்களைக் கைப்பற்ற ஆரியரல்லாத மக்களைத் தன்னுடன் இணைத்து கொண்டாரென்று ஆய்வு கிட்டத்தட்ட உண்மையாகி விடுகிறது. ஏனென்றால் இந்திய நாடெங்கும் பிராமணர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் ஆரியர்கள், கேரளத்தில் நம்பூதிரிகளாக அறியப்படுவதுடன், நம்பூதிரிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் முழுக்க முழுக்க நம்பூதிரிகள் சுத்த ஆரியாஸ் என்று அடையாளப்படுத்த முடியவில்லை. மேலும் நாயர்களை சவர்ணராகப் பதவிப் பிரமாணம் செய்தது மற்றும் சூத்திரனான நாயர்களுடன் கைகோர்த்தது போன்ற விசயங்கள் நம்பூதிரிகள் தூய ஆரியர்கள் என்ற வாதத்தை தவிடு பொடியாக்கி விட்டது. ஏனென்றால் E.M.S ன் வேதங்களின் நாடுவில் “சில பிரிவுகளைச் சேர்ந்த நம்பூதிரிக் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் கூட ஒரு முறை குருவிடமிருந்து நேரில் கேட்டு பிராயாணம் செய்யலாமே தவிர சுயமாக வேதங்களை கற்றறியக் கூடாது என்று குறிப்பிடுகிறார். E.M.S -ன் கேரளம் - நேற்று இன்று நாளை நூலில் கேரளத்தை செதுக்கிய வர்ணங்களாக குறிப்பிடுவது ஈழுவர், ஆரியர் ஆகிய இரண்டு பிரிவினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இ.எம்.எஸ்- இன் மேலே கண்ட வாக்கு மூலம் கேரளத்து விஞ்ஞான ஆய்வுக் கல்வியின் வெற்றியை வேறு வழியின்று இ.எம்.எஸ் ஒத்துக்கொண்டார்.

மேலும் அதே நூலில் இ.எம்.எஸ். கூற்றுப்படி சிந்துக் கலாச்சரத்திற்கும், தென்னிந்தியாவின் திராவிடக் கலாச்சாரத்திற்கும் உள்ள மேன்மையை மிகைப்படுத்துவதோ, ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட வைதீக காலாச்சாரத்தின் மேன்மையை குறைத்துப் பார்ப்பதோ தவறானதென்று வாதிடுகிறார்.

இ.எம்.எஸ். அவர்களே சதுர்வணத்தின் துவக்கம் வைதீகக் கலாச்சாரமென்ற விசயத்தை மிக சுலபமாக மறைத்து விடுகிறார். புரட்சியாளர் இ.எம்.எஸ். ஏன்தான் இப்படி தடுமாறுகிறாரென்று புரியவில்லை. வைதீகக் கலாச்சாரம் 80% இந்திய மக்களை நாகரீகமற்றவர்கள், கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிய பின்பு ஏன் இந்திய உழைக்கும் மக்களை அரசர்களாக மாற்ற தியாகசீலர்களைக் கொண்ட மார்க்சியவாத கட்சிக்குள் இப்படியோரு கிருமிகர சிந்தனைகள் பரவியது, அவை இந்திய மார்க்சிய வாதிகளின் குறைபாடா? அல்லது இந்திய சமூகம் வர்க்கங்கள் அற்ற வர்ண சமூகமா! இ.எம்.எஸ்-ன் ஆன்மா விளக்கட்டும்.

இந்திய சமூகத்தில் மார்க்சியர்கள் பற்றிய மதிப்பீடுகளுக்கு வந்த பின்தான் நாம் அடுத்த புள்ளிக்கு செல்லமுடியும். முதலில் இந்தியாவில் வர்க்கம் மட்டும் உள்ளதா? அல்லது வர்ணப்பிரச்சனை உள்ளதா என்பதை மார்க்சியர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் மேற்கு வங்க உயர்சாதி பிராமண மார்க்சிய வாத அமைச்சர் தன்னை வெளிப்படையாக உயர்சாதி பிராமணன் என்றழைக்கிறார். அடிப்படையில் வங்காளிகள் பிராமணர்கள் அல்ல என்பது வேறு விசயம். இந்து மிதாகரா பள்ளி வங்காளிகளுக்கு பொருந்தாது. இந்திய சமூகத்தில் சாதி இல்லை என்ற வாதிடுபவர்கள் அநேகமாக சதுர்வணத்தில் 3 அடுக்குகளைக் கைப்பற்றிய பிராமணர்களாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் கால்கள் எறியும் தீயில் வேகவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பண்பாட்டுத்தள ஒடுக்குதலில் அவர்கள் பாதிப்படையவில்லை.

ஆனால் சூத்திரப் பிரபுக்கள் ஏன்தான் சாதி இந்த மண்ணில் இல்லை என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் புரிதல்படி “எத்தனை உற்சாகம் இந்த சூத்திரர்களுக்கு சூதர்களின் பாடலை மெய்மறந்து கேட்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள இயலும்.

Thursday, September 1, 2011

தேனி எம். சுப்பிரமணிக்கு விருது - வாழ்த்து!


தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் சார்பில் எஸ்.எஸ்.பொன்முடி எழுதிய “பசியின் நிறம் வெள்ளை” நூல் அறிமுக விழா மற்றும் கலை, இலக்கியத் தளங்களில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்களுக்கான பாராட்டு விழா போன்றவை கடந்த 29-08-2011 அன்று தேனி இண்டர்நேசனல் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும், நண்பருமான தேனி.எம்.சுப்பிரமணி இணைய இதழியல் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இணைய இதழியல் துறையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய கலை - இலக்கிய சாதனையாளர் விருது, சி. பா. ஆதித்தனார் இதழியல் கழகம் வழங்கிய “தமிழ்த்திணை” விருது ஆகியவற்றின் வரிசையில் இந்த விருதும் சேர்ந்திருக்கிறது.

தேனி.எம்.சுப்பிரமணி மென்மேலும் பல சிறப்புகளைப் பெற நாத்து வழியாக வாழ்த்துகிறோம்.

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-3

3. வள்ளலார் ஒழிப்பும், தமிழ்ச் சாதிய எழுச்சியும்


தமிழக வரலாற்றில் பிராமணரல்லாத தமிழ் சாதிகளுக்கு எதிராக கொடூரமான பண்பாட்டுத் தாக்குதலை பிராமண இயக்கம் துவக்கி இருந்தது. முதல் குறி வள்ளலார். அவர்கள் பிரதானமாக குறிவைத்தது, இந்து வர்ணாஸ்ரமத்துக்கு சவால் விடும் தமிழ் சாதிகளைத்தான் 1911-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு கொடூர சட்டம் 1914-ல் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு தடா, பொடாவைப் போன்ற சட்டமென்றால் அதன் உள் நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்). தமிழகத்தில பார்ப்பனர்களுக்கு சவாலான கள்ளர், மறவர், ஒட்டர், வன்னியர், கவுண்டர், குறவர் இனங்களைக் குறி வைத்தது.

உசிலம்பட்டியை சுற்றியுள்ள பிரமலைக்கள்ளர்கள் தங்களுக்கென்று 8 கள்ள நாடுகளும் 24 உப கிராமங்களும் உள்ளடக்கிய இனக்குழு கலாச்சாரத்தை கொண்டிருந்தனர். வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். பிரமலைக் கள்ளர்களின் திருமண உறவு கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையது, ஒரே கோவிலைக் கும்பிடக்கூடிய மக்கள் பங்காளிகளாகவும், திருமண உறவுக்கென்று ஒரு குறிப்பிட்ட கோவிலை வழிபடுபவர்களை மாமன், மச்சினன் உறவு என்று தொன்மையான திருமண கலாச்சாரத்தை பாப்பாபட்டி, கருமாத்தூர், வாலாந்தூர், நாட்டார்மங்கலமென்று கோவில் வழிபாடு வளர்ந்து தும்மக்குண்டு வரைக்கும் நீள்கிறது. வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். விவசாயம் வளராத காலத்தில் வேட்டையாடுதலை தங்களது குலத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ‘வளரிதடி’ என்னும் வேட்டைக்கருவி இன்றும் காந்தி மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்) காட்சிப் பொருளாக உள்ளது. 1871-ம் ஆண்டு மக்கள் குடிக் கணக்குப்படி விவசாய தொழிலாளர்கள் சாதிகளாக, கள்ளர், மறவர், படையாச்சி, பள்ளி, பள்ளர், நந்தமர், மூப்பர், உடையார், வன்னியர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கள்ளர்கள் சமூகம், வாழ்க்கையானது ஓர் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி (நாடு) கூற்றம் என்னும் பெரும் பிரிவையும் நாடு என்னும் சிறுபிரிவையும் உள்ளடக்கியதாகும். மதுரைக்குக் கிழக்கே நிர்வாகத் தலைமையின் அடிப்படையிலும் வழிபாட்டுரிமையின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டுள்ளன கள்ளர்களின் வாழ்விடங்கள் ‘நாடுகள்’ என்றழைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் சில ஊர்களே அடங்கியிருக்கும். தலைமைக் கிராமம் ஒன்றும் அதனைச் சார்ந்த் சில துணைக் கிராமங்களும் அடங்கியது ஒரு நாடாகும். நாடுகளின் தலைவர்களாகக் கள்ளர்கள் இருந்தனர். இந்த நாடுகளைச் சேர்ந்த கள்ளர்கள் நாட்டார்’ எனப்பட்டனர். சிவகங்கைக்குக் கிழக்கே 14 நாடுகள் இருந்தன. அவை குன்னங்கோட்டை நாடு, தென்னிலைநாடு, உஞ்சனை நாடு, இரவுசேரி நாடு, செம்பொன்மார் நாடு, கப்பலூர் நாடு, இரும்பா நாடு, சிலம்பா நாடு, வடம்போகி நாடு, தேர்போகிநாடு, கோபால நாடு, ஏழுகோட்டை நாடு, ஆற்றங்கரை நாடு, முத்து நாடு ஆகியவையாகும். இவற்றுள் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மார் நாடு ஆகியவை தேவக்கோட்டைக்கு அருகில் உள்ளன. (இரா. தேவ.ஆசீர்வாதம். மூவேந்தர் யார்?)

2-4-1920 அன்று மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கள்ளர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது, 17 கள்ளர்கள் மாண்டனர். கள்ளர்கள் மீது பட்ட குண்டினை இயக்கிய துப்பாக்கி வேண்டுமென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் துப்பாக்கிக்குள் இருந்த கருமருந்து இந்து வர்ணாசிரமத்துக்கு சொந்தமானது. வரலாற்றில் சவாலாக விளங்கிய ஒரு தமிழ் சாதிக்கு எதிரான கொடூர தாக்குதல் தான் “பெருங்காமநல்லூர் பயங்கரமென்றே உணர வேண்டும்.

மதுரையின் புகழ் பெற்ற வழக்கறிஞரான வெங்கட்ராம ஐயர் வன்முறையின் மூலம் கோவில் நுழைவில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்தும்படி தன் கட்சிக்காரரும் நெருங்கிய நண்பருமான முத்துராமலிங்கத் தேவரை அணுகினார். ஆனால் தேவர் அவருக்கு உதவவில்லை. ( தொ.பரமசிவம் - தெய்வங்களும், சமூக மரபுகளும் ப - 97)

அதன் காரணமாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரஸ் பார்ப்பன் ராஜாஜி காங்கிரஸ் என்று ஒதுக்கி தனது பார்வையை வங்க பூமியை நோக்கித் திருப்பினார்.

பிராமணர்களுக்கும், வங்காளிகளுக்கும் இடையே உள்ள வரலாற்று பகையினை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிக்கைச் செய்தியை பார்த்தாலே உணர்ந்து கொள்ள இயலும்.

“பிரிட்டிஷ் ராஜ்ஜியம்” ஓய்ந்து போனால் பெங்காளிகளா, மகராஷ்டிரர்களா, சீக்கியர்களா யார் ராஜ்ஜியத்தை ஏற்று நிர்வாகம் செய்வார்கள்?.

வங்க மண் இந்து வர்ணாஸ்ரத்தோடு நேரடி மோதலில் ஈடுபடவில்லை என்ற போதும் நீர்த்துப் போன சாதிய மேட்டிடைவாத பூமி என்றே உணரலாம்.

ஆகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த நிலைப்பாடு ஒரு புறம் வர்ண எழுச்சி மற்றொரு புறம் இந்திய சுதந்திர போர் ‘எட்கர் தர்ஸ்டன்’ எழுதிய Caste and Tribes of Southern India, ஆய்வின் வெளிப்பாடு கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் என்ற வரலாற்று வடிவ மாற்றம் இந்திய சமூக வரலாற்றில் துல்லியமான ஆய்வாகும். ஏனெனில் வரலாற்றில் தெலுங்கு மன்னர்களால் கள்ளர்கள் குறிவைக்கப்பட்ட போது, கள்ளரிலிருந்து மறவராக உருமாறுவது இயல்பானது. ஏனென்றால் மன்னர்களாலும், அரசினாலும் குறி வைக்கப்படும் மக்கள், ஒன்று அரசினை வீழ்த்திக் கைப்பற்ற வேண்டும் - இல்லையேல் அரசின் கொடிய அரக்க கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உருமாறி ஆக வேண்டும். கள்ளர்கள் மறவர்களாக- உருமாறிய துல்லிய பதிவுகள் கிடைக்காத போதும் - எட்கர் தர்ஸ்டனின் ஆய்வு கள்ளர் என்னும் புள்ளி மறவராக வெளிப்பட்டது என்பதை மறுக்க இயலாது. வரலாற்றில் கள்ளர் என்னும் புள்ளி மறவராக மாறிய பின்னும் கள்ளர், மறவர் கலாசாரத்திற்கு நேர் எதிரான கலாச்சார மக்கள் ஒரு புள்ளியாக எதிர் வருகின்ற போது கள்ளர், மறவர் என்னும் புள்ளியை இதர பகுதி மக்களுடன் தொடர்புப்படுத்த புதியதோர் சேர்க்கைப் புள்ளியாக பரிணமிப்பது ஒரு வகையான அறிவியல் பார்வையாகும். அந்தப் புள்ளியை அகமுடையாராக அறிய முடிகிறது. தமிழகத்தில் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்ற கள்ளர் மறவர், அகமுடையார் என பரவலான அங்கீகாரத்தை மூன்று தரப்பு மக்களிடம் பெற்றுள்ள போது, எட்வர்ட் தர்ஸ்டனின் நான்காவது புள்ளியான வெள்ளாளர், கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் புள்ளியை நோக்கிய நகராமை எட்கர் தர்ஸ்டனின் ஆய்வில் சிறியதோர் விடுபடுதலையும் - முக்குலத்து மக்கள் அல்லாத தமிழ் சாதிகள் நூற்றுக்கணக்காண புள்ளிகளாக பிரிந்து சென்றதற்கான ஆதாரங்களைப் பண்பாட்டுத் தளத்தில் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும்.

பசும்பொன் தேவரைப் போன்ற நிலைப்பாட்டினை எடுத்தவர் நெல்லை சீமையில் உதித்த நல் முத்தான வ.உ.சி அவர்கள்.

வ.உ.சி. பற்றிய ஈழ எழுத்தாளர் அ. கெளரி காந்தன் புகழாரமே வ.உ.சி யைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

“சனாதன இந்து” இந்திய தேசியத்துடனும், சைவத் தமிழ் வைதீகத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத, முற்போக்கு ஜனநாயக பகுத்தறிவுடனும் சீர்திருத்த மற்றும் தலமாற்றச் செல் நெறிகளுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியத்தைப் புறந்தள்ளி வைக்காத உறுதி மிக்க இந்திய தேசியவாதியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்ட வ.உ.சி பற்றிய கெளரி காந்தனின் நிலைப்பாடு வ.உ.சி யின் நேர்மைக்குப் போதுமானது. வ.உ.சியைப் பொறுத்த வரையில் “எந்த ஒரு நூலாக இருந்தாலும் குற்றம் குறை இருக்குமென்றால் புறந்தள்ளத் தயங்கக் கூடாது. கடவுள் எழுதினார் என்ற நூலிலும், பிழை இருக்குமெனில் புறந்தள்ள தயங்கக் கூடாது. சைவத்திலும் அப்படியே, வைணவத்திலும் அப்படியே” என்றார். இன்று தமிழகத்தில் முளைத்திருக்கும் சிலர் வள்ளலாரை உயர் சாதி இடுக்கினிற்கான அவதாரப் புருசராய் நிறுவ இயலாது. வள்ளலாரின் ‘ஒரு சாதி’ கோசம் வேப்பங்காயாய்க் கசக்க சனாதன எதிர்ப்புப் போராளி வ.உ.சியை முன்னிறுத்தி தோல்வியடைந்து வருகின்றனர்.

கேரள பூமியில் தோன்றிய மின்னல்களைப் போல தமிழ்ச் சூழலுக்குத் தகுந்தவாறு இடியுடன் கூடிய மின்னல்கள் தமிழக வானில் மின்னத் தொடங்கியது. இத்தகைய சமூகப் பின்னனியுடன் தமிழகத்தில் திராவிட இயக்கம் எழுச்சி பெற்றது போல கேரள பூமியில் கேரள மக்களின் கல்வி, பண்பாடு, அரசியல் என்ற ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம் (SNDP) தனது பணியினைத் துவக்கியது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” அமைப்பின் சமரசமற்ற களப்போராளியான சகோதரன் ஐயப்பன் பின்னால் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புன்னப்புரா வயலார் எழுச்சி - கேரள மண்ணில் தன்னை இந்திய சுதந்திரப்போரில் ஆழமானப் பதிவினைப் பதிவு செய்தது.

தமிழகத்தின் வர்ண விடுதலை சுதந்திரத்திற்கு முன்பே துவக்கப்பட்டும் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

கேரளத்தில் சாதி, மத ஒடுக்குதல் அல்லாத சமூகம் உருவானதற்கு பிரதானமான 1924-ல் நடந்தேறிய வைக்கம் போராட்டமே அனைத்து கேரளத்து ஜாதிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்டியது. வைக்கம் போரினைப் போன்று தமிழகத்தில் தமிழ் சாதிகள் ஒன்றிணைத்த போராட்டம் நிகழவில்லை எனலாம். தமிழ் சாதிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே போராடி வெற்றியைப் பதிவு செய்தது. இன்றைக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் ஜாதிகள் பலமான ஜாதிகளாக உருமாறியுள்ளது ஆனால் இன்றைய பலமான.. பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த போதும் அவைகள் ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த போது இன்றைய தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் சாதிகள் வேடிக்கையாளராக அமர்ந்திருந்தனர். அன்றைய காலமே இன்றைய தலித் சாதியினர் எழுச்சி பெற்றிருக்க முடியும்.

பேரிகை ஜாதியினரான இன்றைய விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் போராளிகளுக்கு உந்து சக்தியாக உள்ள இரட்டை மலை சீனிவாசனும், அயோத்தி தாச பண்டிதரும் (1845 -1914) கருத்தியல் மட்டத்திலும் கள மட்டத்திலும் வர்ண விடுதலைக்கான முழக்கத்தை தமிழகத்தில் முதலில் எழுப்பியவர்கள். இரட்டை மலை சீனிவாசன் தனது இதழில் 22-9-1894 பதிப்பில் ஐ.சி.எஸ். தேர்வுகளை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில் நடத்தும் யோசனையை எதிர்த்து 3412 பேரிகை சாதியினர் கையெழுத்திட்ட மனு ஒன்று தளபதி செகனி வழியாக நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்து அரசர்கள் ஆண்ட பொழுது அவர்கள் அரசியல் பிராமணர்கள் உயர்ந்த பதவிகளைப் பிடித்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியிலும் இந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்ற பிராமணர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாண்டு வந்தனர்.

பிராமணரல்லாதோர் உயர் பதவிகளைப் பெறுவதற்கான தகுதிகளை அடைவதற்கு முன்னதாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அந்த உயர்ந்த பதவிகளையெல்லாம் தங்கள் ஏகபோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் ஐ.சி.எஸ். தேர்வுகளை ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் நடத்த வேண்டுமென பிராமணர்கள் கிளர்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இரட்டைமலை சீனிவாசனுக்கு நிகரான அயோத்திதாச பண்டிதரின் சுதந்திரப் போராட்ட விமர்சனம்.

“இது வரையில் மதத் துறையில் ஆதிக்கம் வகித்தவர்கள் இனி மேல் அரசியல் துறையில் முந்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.”

இது தியோபிசிக்கல் சபை மண்டபத்தில் காங்கிரஸ் அமைப்பு சம்பந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்டிதரும் கலந்து கொண்டார். அக்கூட்டம் முடிந்த பின் அவர் ஆற்றிய உரையினை சுதந்திர இயக்கத்தில் பிராமணர்கள் தலைமையேற்றதின் நோக்கம் பற்றிய பதிவாகும்.

தமிழக வர்ண விடுதலைப்போரில் பேரிகை ஜாதியினர்கள் பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்டனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தலித் சாதிகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. பிராமண ஆதிக்கம் வீழ்ந்த பின்பு தமிழ் மண்ணில் பிற்படுத்தப்பட்டவன் பிராமணனாக தன்னைக் கருதத் தொடங்கினான். பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்ட தலித் மக்களைப் புறந்தள்ளினர்.

கருத்தியல் மட்டத்தில் பேரிகை சாதியினர் (விடுதலை சிறுத்தைகள்) எழுச்சி பெற்ற போது, தேவேந்திர குல மக்கள் கிறிஸ்துவத்தின் உதவி கொண்ட பலமான கல்வி பெற்ற சமூகமாய் எழுந்தனர்.

ராமநாதபுர மண்ணில் உதித்த இம்மானுவேல் தேவேந்திரன், தேவேந்திர மக்களை எழுச்சி பெறச் செய்ய தனது உயிரைத் தியாகம் செய்தார். 33வயதில் தனது உயிரைத் தனது சமூக மக்கள் எழுச்சிக்காக அர்ப்பணித்த இம்மானுவேல் தேவேந்திரன் தமிழகத்து வானில் உதித்த துருவ நட்சத்திரம் என்பதை நேர்மையானவர்கள் ஏற்கனவே செய்வர்.

கேரள மண்ணில் சமூக இயக்கம் சீராக நடக்க வைக்கம் போராட்டம் கேரள மண்ணைத் தயார் செய்தது.

கேரள மண்ணில் பலமான அடர்த்தியான சமூகமாய் ஈழுவ சமூகம் கேரள வரலாற்றில் பட்டியக்கல்லாய் பங்களிப்பு செய்தனர். கேரளம் என்னும் பூமி கடலுக்கடியிலிருந்து சதகமலையாய் வெளியே வந்த போது ஈழ நாட்டினிலிருந்து தென்னைக் குருத்தோடு சதகமலையில் குடியேறியவர்களை ஈழ நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற புரிதலுடன் ஈழுவன் என்று அழைக்கப்பட்டனர். தென்னைக்கு மலையாளத்தில் கேரம் என்னும் பெயர் உண்டு.

பந்தளம் நாட்டில் பந்தளம் பணிக்கர் வகையறா என்று அழைப்பவர்கள் நிலக்கிழார்களாக வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாக “பாலி” மொழியில் பல செப்பேடுகள் ஆதாரமாய் கிடைத்தது. “குரு நித்ய சைதன்யயதி” போன்றவர்கள் பலமான ஈழுவ நிலப்பிரபு வகையாறாவை சேர்ந்தவர். மூக்கோத்து ஆசான் போன்ற ஈழுவ நிலப் பிரபுக்கள் பௌத்தம் அரசாண்டு வீழ்ந்த பின்பும் இந்து மத மேல் ஆதிக்கத்தின் பின்பும் பலமான நிலப்பிரபுக்களாய் வாழ்ந்தனர் என்பதற்கான அடையாளங்களே.

பௌத்த மதம் வீழ்ந்த போது பௌத்த கோவில்கள் இந்து கோவிலாக மாற்றப்பட்டு கோவிலுக்கான நிலங்களை ஆரியர்கள் - அரசர்கள் உதவியுடன் கைப்பற்றினர். சபரிமலை ஐயப்பனுக்கு சாஸ்தா என்று பெயருள்ளது. சாஸ்தா என்பது புத்தனின் பெயர் அதன் பின்பே பூர்வகுடிகள் கையிலிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்கள் பின்தங்கினார்கள் என்று உணர முடியும்.

கேரள மண்ணில் ஈழுவர்கள் கையிலிருந்த நிலங்கள் முழுமையாக பறிக்கப்படாமல் சிறிய நில உடைமை சமூகத்தினராய் வாழ்ந்தனர். ஸ்ரீ நாராயண குரு விவசாய குலத்தில் பிறந்தார். கால்நடைகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. குமாரன் ஆசான் போன்றவர்களிடம் நிலங்கள் இருந்தன.

ஸ்ரீ நாராயண குரு எழுச்சிக்குப் பின்பு சிறிய தொழில்களான கயிறு, ஓடு துவக்கப்பபட்டு 40% ஈழுவ மக்களின் குலத்தொழிலான கள் இறக்குவது நிறுத்தப்பட்டது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் தந்த கல்வி இயல்பாக ஈழுவர்களை பலம் கொண்டவர்களாக உருவாக்கிய போது கூடவே ஈழுவரல்லாத அனைத்து சாதியினர் கல்வி கற்றனர். தற்போது கேரளாவில் அனைத்து மக்களும் கல்வி கற்றுள்ளனர்.

பொருளாதார பலம் பெற்ற ஈழுவ சமூகம் முந்தைய சமூக ஒடுக்குதலை மறந்து உயர்சாதி பூனூல் அணியத் துவங்கினர். வைசியர் இல்லாத கேரளத்தில் ஓடு, கயிறு தொழில்களைக் கைப்பற்றிய ஈழுவர்கள் தங்களை உயர் ஜாதி எனக் கருதத் தொடங்கினர். வைக்கம் போராட்டம் ஈழுவர்களின் பூனூலை அறுத்தெறிந்தது. தமிழகத்துப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சாதிய மேட்டிமை வாதத்தை திராவிட இயக்கங்களும், தேசிய இயக்கங்களும் எதிர்த்த போதும் அவைகளைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டது. காரணம் பிற்படுத்தப்பட்ட தமிழ் சாதிகளின் பலம் மிருக பலமாகிவிட்டது.

தந்தை பெரியார் சாதியைத் துறந்தவர் என்பதும் திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு நேர்மையாக நடந்து கொண்டனர் என்பதன் பதிலே 69% பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு மற்றும் வெண்மணி சம்பவங்கள் போன்றவை.

வைக்கம் போராட்டம் என்பது கேரளத்தில் ஒரு புதிய சூழலை உருவாக்கியது. பொருளாதார பலம் பெற்ற ஈழுவன் இனி எவராலும் ஒடுக்க இயலாது என்ற கனவு நொறுங்கிப்போனது.

மாதவன் வழக்கறிஞர் தடுத்து நிறுத்தப்பட்ட போது தங்களைப் பணிக்கர் என்று இறுமாப்படைந்தவர்கள் இதயத்தில் ஓட்டை விழுந்தது.

கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் ஈழுவர், நெசவாளர்கள், ஆசாரி, வன்னியர், பஞசமர்கள் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானது. (Selected essays - P 9 Mahendra P.Bhatia)