Thursday, April 17, 2014

சுத்தம் செய் - குறும்படம்

சுத்தம் செய் - குறும்படம்

மதுரை வழக்கறிஞர்கள் சுத்தம் செய் எனும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தக் குறும்படம் தற்போது யூ டியூப்பில் வலம் வருகிறது. போலி வழக்கறிஞர்களைக் களைய மதுரை வழக்கறிஞர்கள் எடுத்த குறும்பட முயற்சி இது.

இந்தக் குறும்படத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் கீழ்க்காணும் யூடியூப் இணைய முகவரியில் பார்வையிடலாம். பார்வைக்குப் பின்பு தங்கள் கருத்துகளைப் பதிவிடலாம்.

https://www.youtube.com/watch?v=aW6SLh2--QQ

Sunday, December 8, 2013

சிம்மக்கல் சீனிவாசன் - தாங்களும் பங்கெடுக்கலாம்...!


தொழில் போட்டியில் பணத்துக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினருக்கும், இதைத் தடுக்கப் போராடும் காவல்துறையின் சிறப்புப் படையினருக்கும் நடுவில் உயிரைக் காக்கப் போராடு இளம் தொழிலதிபர்.

மதுரை மண்ணின் கலாச்சாரம் மற்றும் தொன்மையான விவரங்கள் போன்றவற்றைச் சுவையான காட்சிகளாகச் சேர்த்து அரிதான தமிழ் திரைப்படப் பழைய காட்சிகளின் சேர்க்கைகளுடன் புதிய வடிவில் தயாராக இருக்கிறது.

“சிம்மக்கல் சீனிவாசன்”

இந்தப் படத்தயாரிப்பில் தாங்களும் பங்கெடுக்கலாம்...

குறைந்த பட்ஜெட்டில் மதுரை மாநகரை மையமாக வைத்து இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்கும் இம்முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.

30க்கும் அதிகமான நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர்’ 2013ல் தொடங்கவுள்ளது.

இதில் பங்கெடுக்கும் நண்பர்களின் சிறு முதலீட்டுக்குத் திரைப்படத்தின் வணிக வெற்றியில் அவர்களது முதலீட்டு விகிதத்திற்கேற்றவாறு இலாபத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

திரைப்பட ஆக்கம் வெற்றி பெறாவிடில் இணையத்தில் வெளியிடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

குறும்பட வடிவமைப்பில் எடுக்கப்பட்டு திரைப்படமாக திரைப்பட வெளியீட்டாளர்களின் உதவியுடன் வெளியிடப்படவுள்ளது. திரைப்பட வெளியீட்டாளர்களின் உதவி கிடைக்காவிடில் நேரடியாகத் திரையரங்குகளைத் தேடி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய முயற்சிக்கு தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

விலாங்கு மீன்கள் மட்டும் வாழும் திரை நீரோட்டத்தில்
நெத்திலி மீன்களும் நீந்த வேண்டும் எனும் கண்ணோட்டத்தில்

சிம்மக்கல் சீனிவாசன் 

இப்படத்திற்கான எழுத்து, பாடல், இயக்கம்: 

எஸ். இளங்கோவன், வழக்கறிஞர்.

இயக்க மேற்பார்வை:

திரு. வல்லவன்.

இசை:

திரு. மௌனர்.

ஒளிப்பதிவு: 

திரு. தனபால்.

எங்களின் முதல் குறும்படமான “கடவுள் வாழ்ந்த உலகம்” கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

யூ டியூப்பில் பார்ப்பதற்கான இணைய முகவரி:


அனைத்துத் தொடர்புகளுக்கும்:

எஸ். இளங்கோவன்
வழக்கறிஞர்,
6, இராஜேந்திரா 3 வது தெரு,
கரிமேடு,
மதுரை - 625 016.

கைபேசி:

 9443026036.

மின்னஞ்சல்: 

selangovanadvocate@gmail.com

Monday, May 7, 2012

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!


நோயொன்று வந்து, மருத்துவர்களிடம் சென்று விட்டால் போதும்! நோயைக் குறைக்கிறார்களோ இல்லையோ பணத்தைக் கறப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது இன்று நாடறிந்த உண்மையாகி வருகிறது.

பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.

மனிதன் வாழ்க்கைக்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையை விட்டு, செயற்கைக்குப் போன மனிதன் தன் ஆசை அதிகரிப்பால் அதையும் தாண்டி இயற்கையை முற்றிலுமாக அழிக்கத் தொடங்கி விட்டான். இயற்கையையே மறந்து போய் விட்டான்.

இயற்கையின் மறைவால், செயற்கையின் விளைவு கடுமையாக இருக்கிறது. இயற்கையின் சீற்றம் மனிதனைப் பாடாய்ப் படுத்துகிறது.

இது போல் இயற்கை உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் மறந்ததால் மனிதன் வாழ்க்கை நோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த நோயின் பிடியில் இருப்பவர்களை தங்களின் மருத்துவத் தூண்டிலில் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தைப் பிடிக்க மருத்துவர்கள் வந்து விட்டார்கள் என்கிற உண்மையையும் இயற்கையான உணவும், உடற்பயிற்சியும் இருதய நோயைக் கூடக் குணப்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட குறும்படம் இது.

கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.



யூ டியூப்பில் பார்ப்பதற்கான இணைய முகவரி:

http://youtu.be/LP-G6lXPJ3g

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!

Monday, April 16, 2012

தேனி எம்.சுப்பிரமணிக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு


முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியராகவும், தமிழ் விக்கிப்பீடியா பயனர்-நிர்வாகிகளுள் ஒருவராகவும் இருந்து வருபவர் தேனி. எம்.சுப்பிரமணி. இவர் தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலை கடந்த 2010 ஆம் ஆண்டில் எழுதியிருந்தார். இந்த நூலை சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது.


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் தமிழில் வெளியான நூல்களில் 31 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் தேனி எம். சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரம் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தமிழ்த்தாய் விருதினை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும், உ.வே. சா விருதினை புலவர் செ. இராசுக்கும், கபிலர் விருதினை பேராசிரியர் அ.அ.மணவாளனுக்கும், ஔவையார் விருதினை திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கும் வழங்கினார்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாநூலை எழுதிய தேனி எம். சுப்பிரமணிக்கு சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். தமிழ் விக்கிப்பீடியா நூலை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 27 நூலாசிரியர்களுக்கும் இந்நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும், பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தேனி எம். சுப்பிரமணி எழுதிய முதல் நூலே தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நண்பர் தேனி எம்.சுப்பிரமணி மென்மேலும் பல பரிசுகள் பெற்று மேலும் சிறப்படைய வாழ்த்துவோம்.

Tuesday, December 27, 2011

மயக்கம் என்ன? - தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்ட திரைக்கதை?


அடுத்தவர் மூளை உழைப்பை திருடுவது எத்தனை மட்டரகமானது என்பதே கதையின் கரு. “தன் உழைப்பை ஒருவன் திருடினான் என்பதற்காக மாடியிலிருந்து தலைகுப்புற கீழே விழுவது? மனைவியின் கருவை கலைக்க காரணமான கோபம்… அனைத்தும் ஒரு முழுமையான பைத்தியக்காரன் என்று சான்றிதழ் தரலாம்..”

மனித மூளை தொடர்ந்து புதிய சிருஷ்டிகளை சிருஷ்டிக்க முடியும் என்பதை மறுத்து திரைக்கதை கட்டப்பட்டு இறுதியில் முடிச்சு அவிழ்ந்தாலும் திரைக்கதையில் கோணல் தெரிகிறது.

2004 அக்டோபர் “நவீன ஊடகம்” இலக்கிய இதழில் வெளிவந்த கவிதையே இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படமாக வெளி வந்தது என்கிற சிவில் வழக்கு சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஓ.எஸ்.எண்:11382/2010 ஆக தற்சமயம் நிலுவையில் உள்ளது. இப்பட நாயகனும் அவ்வாறு முயலாமல் பைத்தியமாக மாறுவதனால் மேலும் மூளை திருட்டு அதிகரிக்கவே செய்யும். காவல்துறை நீதித்துறை போன்றவை தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்டதாகவே தமிழ் திரைக்கதைகள் கட்டுப்படுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

போராளி - குடை சாய்ந்ததா?


ஐந்து இடங்களில் முத்திரை பதித்த இயக்குநர் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வண்டியை குடை சாய வைத்து விட்டார்

சிலோன் புரோட்டா...

சிரிப்பு வெடி காட்சிகள்

அறையில் அடைக்கப்பட்டுள்ள அக்காவை பைத்தியமில்லை என்று நிரூபிக்கும் காட்சி…. உள்ளிட்ட கைதட்டல் காட்சிகள் படம் முடிய வந்த போதும் …

வன்முறை காட்சிகளிலிருந்து தமிழ் திரையுலகம் மீள வேண்டியது காலத்தின் தேவை.

களவாணி, பாசு என்கிற பாஸ்கரன்… வெற்றிக்கு பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. இயக்குநர் சமுத்திரகனி சசிகுமார் கூட்டணி அடுத்த படத்தில் முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.

இறுதி காட்சியில் விஜய், அஜித், விக்ரம்… உள்ளிட்ட ஹிரோயிச நாயகர்களைக் கடந்து ஐம்பது, அறுபது பேரை அடித்து நொறுக்குவதால் நொறுங்குவது சசிகுமாரின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தான்.

வேலாயுதம் = இரண்டு கிளைமாக்ஸ் ?


தொடர்ந்து தடுமாறிய விஜய்யின் தடுமாற்றத்தை சற்று தடுத்து நிறுத்தி உள்ளது.

ஹீரோயிசத்தை இடைவேளை வரை அடக்கி வைத்து, பின் கடைசிக் காட்சிகளில் கொட்டி தீர்த்து விட்டனர்.

திரைக்கதை முந்தைய நான்கு படங்களுக்கு இது பரவாயில்லை.

ஆயிரமாயிரம் திரைக்கதைக்கான களங்கள் விரிந்து கிடக்கும் தமிழ் இலக்கியச் சோலையில் கதாசிரியர்களுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் தமிழ் திரையுலகம் பல நூறு கோடிகளை இனி வருடம் தோறும் இழப்பதைத் தவிர்க்க முடியாது.

ஒரு கிளைமாக்ஸ் என்ற தமிழ் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டு கிளைமாக்ஸ் உருவாக்கிய முதல் தமிழ் திரைப்படம்